என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலை பகுதி"
- போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உற்பத்திசெய்கின்றனர்.சமீப நாட்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தன.
மேலும் அதற்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிலோ 5 ரூபாய்க்கு தக்காளியும், 10 ரூபாய்க்கு குறைவாக வெங்காயமும் விற்பனையாகின. தக்காளி, வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போதைய நிலையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால் வைகாசி பட்ட வெங்காய சாகுபடியை விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே விவசாயிகள் பலர் பட்டறை அமைத்து, வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.20க்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் போதிய விலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடமையே கண்ணாக மீண்டும் வெங்காய நடவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
- சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது.
- மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும்.
உடுமலை:
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். கடந்த மே மாதம் கேரளாவில் பருவமழைகாலம் துவங்கியது. இதனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில் சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்து சுழன்று அடிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.
குறிப்பாக பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் ஓட்டுனர்கள் சிலர் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.